சிலை பார்க்க அச்சு அசலாக காஜல் போன்றே உள்ளது. இருப்பினும் சிலையை விட காஜல் தான் அழகாக உள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள்.
முன்னதாக சிலைக்கு அளவுக்கு எடுக்க மேடம் டுசாட்ஸ் ஆட்கள் வந்தபோது எடுத்த புகைப்படங்களை காஜல் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் சிறு பிள்ளையாக இருந்தபோது மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு சென்று அங்குள்ள சிலைகளை பார்த்து வியந்திருக்கிறார்.
காஜல் தன் சிலையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன