கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். வில்சன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறினார்.
மறைமுகத் தேர்தல் விவகாரம்- நீதிமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட திமுக!
இழப்பீடு தொகை:
* திருவள்ளூரில் பெண் ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர் யாகேஷ் குடும்பத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி நிதியுதவி அறிவித்தார். அதாவது ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை 23 இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்தித்து பேசினர். அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினர்.
பதவிக்காலம் நீட்டிப்பு:
* உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்த மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.