தரம் உயர்வு:
* பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை 295 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ஒரு லட்ச ரூபாய் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றார்.
அரசு வேலை:
* கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். வில்சன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை 295 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.