அதனை நான் வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்திற்கும் தண்டனையாக இருக்ககூடாது என்று போராடும் பிள்ளைகள் நாங்கள்.
இருப்பினும் பெண்களை ஒரு போகப் பொருளாக, போதைப் பொருளாக , நுகர் பொருளாக கருதி வன்புணர்வு செய்யும் அந்த செயலுக்கு மரணத்தை தவிர வேறு தண்டணை இருக்க முடியாது.
பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 90 நாட்களில் குண்டாசை ரத்து செய்து வெளியே விடுவது என்பது வரலாற்று பெரும்பிழை.
குழந்தைகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கும் இதுபோன்ற தண்டணைகள் தரப்பட்டால்தான் அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு அச்சம் பிறக்கும். அதனால் இதை நாங்கள் வரவேற்கிறோம். நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைப் போன்ற தண்டனைகளே வழங்குவோம்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.